மத்திய அமைச்சர் உருவ படம் எரித்த திமுக வினர்

கிள்ளியூர்;

Update: 2025-03-11 03:44 GMT
தமிழக எம்பிக்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில்  தரக்குறைவாக பேசினார் என்ற புகார் எழுந்தது. இதை  கண்டித்து இன்று  கிள்ளியூர்  தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அமைச்சர் உருவ படம் எரிக்கும்  போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய  செயலாளர் கோபால் தலைமையில் கருங்கல் அருகே பாலூர் சந்திப்பில் நேற்று மாலையில் இந்த போராட்டம் நடந்தது. தர்மேந்திர பிரதாப்பினுடைய உருவப் படத்தை எரித்து கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக  தொண்டர்கள் நிர்வாகிகள் கண்டன கோஷம் எழுப்பினர். இதில் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Similar News