திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழாவில் இன்று தேரோட்டம் நடந்தது.அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு , யாகசாலை பூஜை நடந்தது. 10:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது.முதலில் விநாயகர், இரண்டாவதாக வள்ளி தேவசேனா சமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர்கள் என நான்கு தேர்களுக்கு மத்தியில், பெரிய தேரில் சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ் வரர் எழுந்தருளினார்.