வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

ஈத்தாமொழி;

Update: 2025-03-11 08:38 GMT
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே திக்கினான் விளை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (35). கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.        சமீபகாலமாக சிவராஜ் கடன் பிரச்சனையில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் சம்பவ தினம் வீட்டில் விஷ மருந்து தின்று மயங்கி கிடந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.       பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று சிவராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஈத்தமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News