அருமனை :  கடத்தல் வாகனங்களை கட்டுப்படுத்த சோதனை சாவடி

கன்னியாகுமரி;

Update: 2025-03-11 12:35 GMT
கேரளாவில் இருந்து  இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் கொட்டி விட்டு செல்லும்  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல் இங்கிருந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை கேரளாவுக்கு  கடத்தப்படுகின்றன.       குமரி மாவட்டத்தில் சுமார் 36 சோதனை சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் சிசிடிவி கேமரா இணைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில பகுதிகளில் சோதனைச் சாவடி இல்லாமல் உள்ளது. அருமனை  சுற்றுவட்டார பகுதியில் 3 சோதனை சாவடிகள் இருந்தன. புதிய எஸ்பியாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மேலும் பணிச்சமூடு - புலியூர் சாலை சந்திப்பில் சமீபத்தில் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டது.        இருப்பினும் மாற்றுப் பாதை வழியாக கும்பல்கள் கடத்தல் தொழில் செய்து வருவதால் இப்போது புலியூர் சாலை பகுதியில் மேலும் ஒரு சோதனை சாவடி அமைக்க எஸ் பி ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த சோதனை சாவடி செயல்பாட்டிற்கு இன்று முதல் வந்துள்ளது. மேலும் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்க எஸ் பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

Similar News