சுசீந்திரம் :வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் 

கன்னியாகுமரி;

Update: 2025-03-11 13:45 GMT
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள சின்னணைந்தான் விளை பகுதியில் வசிப்பவர் கண்ணன் (59). இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். சாந்தி வணிக வரித்துறை உதவி ஆய்வாளர். ஒரு மகனும் உண்டு.  கணவர் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதமாக கண்ணன் அவரது நண்பர் சந்திரகுமார் என்பவருடன் சித்தாள் வேலைக்கு சென்று விட்டு  சந்திர குமாருக்கு சொந்தமான ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.         இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி சந்திரகுமார் வெளியூர் சென்றார். இன்று காலை  கண்ணனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வீட்டில் அழுகிய நிலையில் கண்ணன் இறந்து கிடந்துள்ளார் இது குறித்து சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.       தகவலின் பெயரில் சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News