ஐக்கியபுரத்தில்  மகளிர் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுங்கான் கடை;

Update: 2025-03-11 13:50 GMT
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் சல்வேஷன் ஆர்மி சமூக சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு திட்ட நிறுவனம் இணைந்து "மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி"  சுங்கான்கடை, ஐக்கியபுரத்தில் நடைபெற்றது.      இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் விஜி ராஜ்குமார்  முன்னிலை வகித்து விழிப்புணர்வு உரை வழங்கினார். நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை உதவி பேராசிரியர் தீபன் ராஜ்  பெண்கள் சமூகத்தில் முன்னேறுவதற்கான வழிகளை விவரித்துப் பேசினார்.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவன் மு. சபரீஷ் ஒருங்கிணைத்து  நடத்தினார்.     இந்நிகழ்ச்சியில் பொது மக்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News