மாமனாரை தள்ளி விட்டதில் உயிரிழப்பு - வழக்கு 

சுசீந்திரம்;

Update: 2025-03-11 13:58 GMT
நாகர்கோவில் அருகே உள்ள கீழ வண்ணான் விளையை சார்ந்தவர் சுப்பையா நாடார் (83). இவரது மகள் சத்யா (42). இவருக்கு பிரேம் ஆனந்த் என்ற கணவரும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிரேம் ஆனந்த் மர  வேலை செய்து வருகிறார். மரப்பட்டறை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும்  கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.       இதனால் சத்தியா கணவரை  பிரிந்து மூன்று மாதமாக வசித்து வருகிறார். சுப்பையா நாடார் சத்யாவின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார்.        சம்பவத்தன்று சத்யா வீட்டிற்கு அவரது கணவர் வந்து தகராறு செய்து உள்ளார். கணவன் மனைவியுடைய தகராறு ஏற்பட சுப்பையா நாடார் தடுக்க முற்படும்போது சத்யாவின் கணவர் தள்ளிவிட்டு உள்ளார். இதில் முதியவர் கீழே மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.        இது குறித்து அவரது மகள் சத்யா கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News