கன்னியாகுமரி அருகே கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கங்கர் சிங் (25). இவர் தனது சகோதரர் சேத்தன் சிங்குடன் கொட்டாரம் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று குங்கர் சிங் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கொட்டாரம் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, ரயில் நிலையம் சந்திப்பு அருகே வைத்து எதிரே வந்த பைசல் (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் குங்கர் சிங், பைசல் மற்றும் அவருடன் வந்த இர்பான் (21) ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். கன்னியாகு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு தனி ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குங்கர் சிங் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.