ராணிப்பேட்டை:இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி!
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து;
ராணிப்பேட்டை எடுத்த பன்னியூர் கிராமத்தில் இன்று இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் துரைபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி காயமடைந்தார். இறந்த ஜெயபாலன் உடல் பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.