மார்த்தாண்டம்   சந்திப்பு பகுதியில் சுருண்டு விழுந்த முதியவர் சாவு

கன்னியாகுமரி;

Update: 2025-03-12 03:52 GMT
குமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (81). தற்போது பொன்னுசாமி இளைய மகனுடன் மார்த்தாண்டம்  பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.      இதையடுத்து அவரது குடும்பத்தினர் தேடி பார்த்த போது மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது மயங்கி கிடந்தது பொன்னுசாமி என தெரியவந்தது. அவர் மீட்கப்பட்டு குழித்தறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.       அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இது குறித்தது மகன் ஜாஸ்பின் பிராங்கிளின் (43) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News