அருமனை :  ரப்பர் தோட்டத்தில் பயங்கர தீ 

கன்னியாகுமரி;

Update: 2025-03-12 04:00 GMT
குமரி மாவட்டம் காரோடு மலைப்பகுதியை ஒட்டி ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. கோடை வெயில் காரணமாக மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து நிலத்தில் விழுந்து கிடக்கின்றன. இந்த நிலையில் பாலுக்குழி என்ற பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் ரப்பர் தோட்டம் முழுவதும் தீப்பற்றி  எரிய ஆரம்பித்தது.      இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு குலசேகரம்  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் சுமார் 210 ரப்பர் மரங்கள் தீயில் கருகியது. அதேபோல் தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த அன்னாசி செடிகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.         நிலத்தின் உரிமையாளர் ஐஸ்வர்யா பெங்களூரில் உள்ளார். சம்பவ இடம் வந்து மஞ்சாலுமூடு கிராம அலுவலர் சுரேஷ், அருமனை போலீசாரம் விசாரணை நடத்தினர்.

Similar News