தாழக்குடியில் அரசுக்கு சொந்தமான பனை மரங்களை வெட்டி கடத்தல்

கன்னியாகுமரி;

Update: 2025-03-12 04:11 GMT
கன்னியாகுமரி அருகே தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை ஓரமாக புத்தனாறு கால்வாய் செல்கிறது. மறு பகுதியில் வீர கேரளப்பன் குளம் உள்ளது. இந்த கால்வாய் மற்றும் குளக்கரையோரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழமையான சுமார் 20க்கும் மேற்பட்ட பனை  மரங்கள் காணப்பட்டன. இந்த சாலை விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.        இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மகும்பல் அப்பகுதியில் கால்வாய் ஓரம் நின்ற பழமையான ஆறு பனை மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். நேற்று காலை அந்த பகுதி வழியாக விவசாயிகள் இதை கண்டனர்.  இயந்திரம் கொண்டு பனைமரத்தை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Similar News