குமரியில் தொடர் மழை: உலக்கை அருவி, காளிகேசம் செல்ல தடை

கன்னியாகுமரி;

Update: 2025-03-12 04:28 GMT
குமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில்  உள்ளூர் மக்களுக்கு நன்கு பரீட்சியமான சுற்றுலாத்தலமாக இருப்பது கீரிப்பாறை அடுத்த தாடகை மலை அடிவாரத்தில் உள்ள காளிகேசம், உலக்கை அருவி பகுதியாகும். இந்த பகுதியையொட்டி அகஸ்தியர் கோவில் உள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.        இந்த நிலையில் தாடகை மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று முதல் இன்றும் மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.        மழை காரணமாக காளி கேசம் பகுதியில் திடீர்  வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை காளிதேசம், உலக்கை அருவி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.        இதற்காக தடிக்காரன் கோணம் சந்திப்பில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக சுற்றுலா வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Similar News