ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-12 04:33 GMT
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. மாவட்ட துணைத்த லைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் வரவேற்றார். மத்திய, மாநில ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் எத்துராஜ் சிறப்புரையாற்றினார். மாநில துணைத்தலைவர் நிலவுகுப்புசாமி விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 70 வயது ஓய்வூதி யர்களுக்கு 10சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுச்செலவையும் அரசே ஏற்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவுடன் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News