சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி

அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்;

Update: 2025-03-12 07:20 GMT
சேலம் செவ்வாய்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள கருவறை, விமானம், அர்த்த மண்டபம் ஆகிய திருப்பணிகள் தொடக்க விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் கலைச்செல்வி வரவேற்று பேசினார். சேலம் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அறங்காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News