சேலத்தில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி

கணவன் உள்பட 2 பேர் கைது;

Update: 2025-03-12 07:25 GMT
சேலம் தாதகப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27). இதனிடையே செல்வத்திற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று செல்வம், மனைவியை கத்தியால் குத்தினார். இதற்கு செல்வத்தின் அண்ணன் துரைசாமி உடந்தையாக இருந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சவுந்தர்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், துரைசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News