கூடுதல் பாதைகள் அமைக்கும் பணி: பெங்களூரூ கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

ரயில்வே அதிகாரிகள் தகவல்;

Update: 2025-03-12 07:28 GMT
பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சேலம் கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கிழக்கு ரெயில் நிலையத்தில் கூடுதலாக ரெயில் பாதைகள் (3, 4-வது) அமைப்பதற்காக ரயில் நிலையத்தின் நடைமேடைகள் அகற்றப்பட உள்ளன, இதனால் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளை கையாள முடியவில்லை. எனவே பெங்களூர் கிழக்கு ரயில் நிலையத்தில் சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் கடலூர் துறைமுகம்- மைசூர் எக்ஸ்பிரஸ் (16231), தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் (16235), கன்னியாகுமரி- கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ், லோக் மானியத்தில் டெர்மினல்- கோவை எக்ஸ்பிரஸ் (11013) ஆகிய ரெயில்கள் நாளை முதல் மறு தேதி அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News