புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை எம்எல்ஏ ஆய்வு
புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை எம்எல்ஏ ஆய்வு;
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டு பகுதியில் 15 வது நிதி குழு மானியத்தில் ரூம் 30 லட்சம் மதிப்பீட்டில் 900 சதுர அடி பரப்பளவு கொண்ட நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது முடிவடையும் தருவாயில் உள்ள இந்தப் பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார நிலையத்தின்பின்புறப் பகுதிகள் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார் மேலும் அறைகளில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் கழிவறைகள் உள்ள குழாய்கள் மருந்தகம் அமைய உள்ள பகுதியில் உள்ள நீர் குழாய்கள்ஆகியவற்றில் இருந்த சிறு தவறுகளை சுட்டிக்காட்டி உடனடியாக சீரமைக்கும்படி கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியவரிடம் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது முப்பது வார்டு நகர் மன்ற உறுப்பினர் செல்லம்மாள் தேவராஜன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் 32 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகர செயலாளர் அசோக்குமார், வடக்கு நகர செயலாளர் சேன்யோகுமார்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.