மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்:நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-03-12 09:42 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்க கணேஷ் என்பவரின் மகன் தேவேந்திர ராஜ் என்பவர் மீது ஜாதியை சொல்லி ஆபாசமாக பேசி கொலை வெறி தாக்குதல் நடத்தியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை சார்பில் மக்கள் தேசம் கட்சி மாநில தலைவர் ஆசைத்தம்பி, திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி செயலாளர்  வழக்கறிஞர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.

Similar News