இரட்டை சிவாலயத்தில் மாசி மக தேர் திருவிழா எம்எல்ஏ பங்கேற்பு

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் மாசி மக தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது;

Update: 2025-03-12 16:58 GMT
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் மாசி மக தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக ஆரணி எம்எல்ஏ சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்து, சுவாமி தரிசனம் செய்தார். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்ணமங்கலம் காவல்துறையினர், மின்வாரிய துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News