மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு : போலீசில் பாஜக புகார்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாசரேத் காவல் நிலையத்தில் பாஜக புகார் அளித்துள்ளனர்.;
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாசரேத் காவல் நிலையத்தில் பாஜக புகார் அளித்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை இழிவாக பேசி உருவ பொம்மைகளை தூத்துக்குடி மாநகரத்தில் எரித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாசரேத் காவல் நிலையத்தில் நாசரேத் நகரத் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கனல் கே ஆறுமுகம் கிளைத் தலைவர்கள் ராமதாஸ், கார்த்திசன், பட்டுராஜன், நிர்வாகி மணி நகர் கோபால் ஆகியோர் உடன் இருந்தனர்