விசாரணைக்கு சென்று செல்போன், கஞ்சாவுடன் திரும்பிய கைதி

சேலம் சிறையில் மெட்டல் டிடெக்டர் சோதனையில் சிக்கியது;

Update: 2025-03-13 04:43 GMT
நாமக்கல் மாவட்டம் கரட்டிப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக அவரை நாமக்கல் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணை முடிந்து மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறை காவலர்கள் அவரை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். அவருடைய உடலில் ஏதோ பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது ஆசன வாயில் சிறிய செல்போன், கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் அவரை கழிவறைக்கு அழைத்து சென்று செல்போன், 30 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது சிறையில் உள்ள கைதி தினேஷ் என்பவர் செல்போன், கஞ்சா எடுத்து வந்தால் பணம் தருவதாக கூறினார். அதனால் கடத்தி வந்ததாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து கைதிகள் சூர்யா, தினேஷ் ஆகிய 2 பேர் மீது சிறைக்காவலர்கள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News