தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (48). இவருக்கு வெரிகோஸ் நோய் ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். சில நாட்களாக நோயின் காரணமாக வலி அதிகரித்து உள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் சம்பவநாளன்று பூச்சி மருந்தை குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியராஜ் நேற்று (மார்.12) உயிரிழந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை.