தேவகோட்டையில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது
தேவகோட்டையில் முன் விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி(46) இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சௌந்தரவள்ளி(48) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று(மார்.12) ஏற்பட்ட தகராறில் சௌந்தரவள்ளி(48) உடபட மூன்று பேர் சேர்ந்து தாக்கியதாக தேவி(46) தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து தேவி(46) கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தேவகோட்டை போலீசார் சௌந்தரவள்ளி(48), மணிமாறன்(52), சுவாதிபிரியா(29) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்