ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம், மேட்டூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம், மாநில திமுக விவசாயி அணி துணை செயலாளர் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் செல்லப்பொன்னி, செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பழனிசாமி, இளைஞரணி மாநில மாணவரணி துணைச்செயலாளர் வீரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மணிராசு, பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, வில்லரசம்பட்டி முருகேசன், ராமசந்திரன், குமரவடிவேல், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருச்செல்வம், ஈ.வி.ரவி, ராஜேஸ் ராஜப்பா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்