சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ராஜாவிற்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அரியப்பம்பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் அவரை காணவில்லை. இதனையடுத்து, அவரது தாய் பூங்கொடி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.