கே எஸ் ஆர் பல் மருத்துவக் கல்லூரியில் வொண்டர் வுமன் நிகழ்ச்சி
கே எஸ் ஆர் பல் மருத்துவக் கல்லூரியில் வொண்டர் வுமன் நிகழ்ச்சி;
சர்வதேச மகளிர் தினத்தை நினைவகூரும் வகையில், மகளிர் அதிகாரமளிப்பு குழு கே.எஸ்.ஆர்.பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் "Wonder Women" நிகழ்ச்சியை நடத்தியது. விருந்தினர்கள் மற்றும் கூடியிருந்தவர்கள் வரவேற்க்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சி பற்றிய முன்னோட்டத்தை முதல்வர் டாக்டர்.சரத் அசோகன் அவர்கள் விளக்கினார். விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர். ஆசிரியர்கள் சிறப்பு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் திரு.கே.எஸ்.சச்சின் சிறப்பு விருந்தினர்கள ைபாராட்டி நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்தினார். உளவியல் ஆலோசகர் மற்றும் எழுத்தாளருமான டாக்டர்.ஆர்த்தி சி.ராஜரத்ததினம் “Focus” இன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். மேலும் கவனத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதைப்பற்றி விளக்கினார். சென்னை கேப்ஸ்டோன் பல் மருத்துவத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநரான குழுந்தை பல் மருத்துவர் டாக்டர்.அருணா மோகன் "Dream to Disruption" என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் நடந்த வாழ்க்கைப் பாடங்களை பற்றிப் பகிர்ந்து கொண்டார். சேலம், வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ரீனா ரச்சல் ஜான், “முழுமைக்கான நாட்டத்தில்” குறைபாடுகள்தான் படிக்கல் என்பதை தெளிவாக வலியுறுத்தினார். வாய்வழி நோயியல் நிபுணர், இரும்பு மனிதன் டிரையத்லான் சாதனையாளர் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் டாக்டர். உஷா ஹெக்டே, வெற்றியை வரையறுப்பது வயது அல்ல, என்ற உறுதியை எடுத்துக்காட்டினார். உடலியல் நிபுணரும் மற்றும் ஆசிரியருமான டாக்டர்.பிரதிபா கே.எம்., “உங்கள் இதயத்தைப் பின்பற்றுங்கள்" என்ற தனது உரையில், தனி நபர்கள் தங்கள் ஆர்வங்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு உறுதியுடன் இருக்க ஊக்குவித்தார். மேற்கண்ட அனைத்து அமர்வுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பார்வையாளர்களை மேலும் அதிகாரம் பெற்றவர்களாக உணரவைத்தன.