குண்டம் திருவிழா

200 வருடமாக கொண்டாடப்பட்டு வரும் தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா;

Update: 2025-03-14 04:05 GMT
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது மலை கிராமமான தாளவாடி . இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12- ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன. தாளவாடி மாரியம்மன் உடன் கும்டாபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளையும் உலா வந்தது. நேற்று முன்தினம் இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது. காலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சாக சிலை பூசாரி நவீன் தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து முன்னே ஆடி வந்தனர் .இதே போல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் .ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர்.பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தலமலை ரோடு, ஓசூர் ரோடு, பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது அங்கு பக்தர்கள் மலர்களால் பாதை அணிவித்து அம்மனை வரவேற்றனர். அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதை தொடர்ந்து மேள தாளங்கள் தப்பட்டைகள் ஒலிக்க தலைமை பூசாரி நவீன் மாரியம்மன் உச்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார். அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம் 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார் .அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர் கோயில் பூசாரி நவீன் குண்டம் இறங்கும் போது கோயிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் முறைகள் நடைமுறைப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் சாம்பிராணி கமழ புகை மண்டலமாக இருந்தது இந்த பிரம்மாண்ட குண்டம் திருவிழாவில் கோவிலின் பூசாரி நவீன் மட்டுமே தீ மிதித்த வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனவே அவர் இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர் அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது குண்டத்தில் இருந்து அவர் வெளியேறியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி, ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். திருவிழா குறித்து கோவில் தர்மகத்தா ராகவேந்திரா கூறும் போது, தாளவாடி மாரியம்மன் கோயில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்ட வருகிறது. மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த விழா நடைபெற்று வருகிறது. தாளவாடி சுற்றுவட்டார ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். குண்டம் திருவிழாவை தவிர சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழாவை ஒட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த விழாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Similar News