கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கா்நாடக வாலிபர் கைது!

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கா்நாடக மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-03-14 07:49 GMT
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கா்நாடக மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை போலீசார் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் ஓட முயன்றபோது, அவரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மாதேஷா மகன் சதீஷா(19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமாா் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Similar News