அரசு கல்லூரி துவங்க வேண்டும்:இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிட வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். ;
தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிட வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். "2025-2026 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, கல்வியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிடவும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி தலைமையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகர மையப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாத ஒரே காரணத்தினால் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் பன்மடங்கு கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். ஆகவே தூத்துக்குடி மாநகர் மையப் பகுதியில் கண்டிப்பாக அரசு கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சி.மிருதுளா, மாநில இணைச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.