மாத்திரவிளை  பயணிகள் நிழற்குடை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கிள்ளியூர்;

Update: 2025-03-14 12:13 GMT
மாத்திரவிளை  பயணிகள் நிழற்குடை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • whatsapp icon
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட,   மணலிக்காட்டுவிளை புனித தெரசம்மாள் குருசடி முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில்  பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று இருந்தது. இந்த பழைய நிழற்குடையை மாற்றி மின் வசதியுடன் கூடிய புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி  பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.    இதனடிப் படையில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை மாற்றி   மின் வசதியுடன் கூடிய புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.                இதனையடுத்து     புதிய பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி தொடக்க விழா இன்று  நடைபெற்றது. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.              இந்நிகழ்ச்சியில் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன்,   கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ்  பொதுச்செயலாளர் எட்வின் ஜோஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News