கன்னியாகுமரியில் வீடு புகுந்து தாய் மகனுக்கு அரிவாள் வெட்டு

இன்று காலையில்;

Update: 2025-03-14 12:31 GMT
கன்னியாகுமரியில் வீடு புகுந்து தாய் மகனுக்கு அரிவாள் வெட்டு
  • whatsapp icon
கன்னியாகுமரி பரமார்த்த லிங்கபுரம் பகுதியில் வசித்து வருவார் ஜெயந்தி (46). இன்று காலை ஜெயந்தி மற்றும் அவரது மகன் படுகாயங்களுடன் வீட்டில் கிடந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஜெயந்தி மற்றும் அவரது மகனை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.       தொடர் விசாரணையில் இன்று அதிகாலையில் மர்மகும்பல் வீட்டுக்குள் புகுந்து ஜெயந்தி மற்றும் மகனை அறிவாளன் வெட்டி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார ஆய்வு செய்து வருகிறார்கள். முன்விரோதத்தில் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என  விசாரணை நடந்து வருகிறது.               குற்றவாளிகளை பிடிக்க  இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தற்போது சிலரை போலீசார் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News