நரிக்கட்டியூரில் மளிகை கடையில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு.

நரிக்கட்டியூரில் மளிகை கடையில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு.;

Update: 2025-03-14 12:40 GMT
  • whatsapp icon
நரிக்கட்டியூரில் மளிகை கடையில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு. மேற்கு வங்காளத்தை சேர்ந்த பலாஸ் தாஸ் வயது 34 என்பவர் கரூர் அடுத்த நரி கட்டியூர் பாலாஜி நகர் 2வது கிராஸ் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உடன் பிறந்த சகோதரர் பிகாஸ் தாஸ் வயது 27. இவர் மார்ச் 9-ம் தேதி காலை 9 மணி அளவில், மளிகை கடையில் பணியாற்றிய போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் பிகாஸ் தாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பலாஸ்தாஸ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பிகாஸ் தாசின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News