அதிமுக சார்பில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.
ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.;

ஆரணி, ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டங்களில் அதிமுக தெற்கு ஒன்றியசெயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மத்திய மாவட்டபொறுப்பாளருமான வரகூர் அருணாச்சலம், திருவண்ணாமலை மத்திய மாவட்டசெயலாளர் எல்.ஜெயசுதா ஆகியோர் கலந்துகொண்டு வாக்குச்சாவடி குழுவில் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களிடம் கள ஆய்வு செய்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அனைவரையும் இலக்கியஅணிமாவட்டசெயலாளர் ஜெகன் வரவேற்றார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்டஇணைசெயலாளர் வனிதாசதீஷ், சிறுபான்மைபிரிவு மாவட்டசெயலாளர் உசேன்ஷெரீப், முன்னாள்தலைவர்கள் ஹேமாவதிவாசுதேவன், அருள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.