தேன்கனிக்கோட்டையில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது
தேன்கனிக்கோட்டையில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ கவி நரசிம்ம கோயிலில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் உற்சவர்களுக்கு பூஜைகள் செய்தனர் பின்னர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.