கோவிந்தபாளையம் அருகே டூ வீலரை திடீரென வலது புறம் திரும்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. இருவர் படுகாயம்

கோவிந்தபாளையம் அருகே டூ வீலரை திடீரென வலது புறம் திரும்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. இருவர் படுகாயம்;

Update: 2025-03-14 13:25 GMT
  • whatsapp icon
கோவிந்தபாளையம் அருகே டூ வீலரை திடீரென வலது புறம் திரும்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. இருவர் படுகாயம். கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி, ஸ்டேட் பேங்க் காலணி அருகே சுப்பிரமணிய நகரை சேர்ந்தவர் சக்தி குமார் வயது 35. இவரது சகோதரர் மணிகண்டன் வயது 41. இவர்கள் இருவரும் மார்ச் 10 ஆம் தேதி மாலை 4:15 மணியளவில், கரூர்- கோவை சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் கோவிந்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, கரூர் தாந்தோணி மலை பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி நந்தினி வயது 32 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி வாகனம் சக்திகுமார் ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு முன்பாக சென்று திடீரென எவ்வித சிக்னலும் காட்டாமல் டூ வீலரை வலது புறம் திருப்பியதால், சக்திகுமார் ஓட்டிய டூ வீலர், நந்தினி ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சக்தி குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சக்திகுமார் அளித்த புகாரில், டூ வீலரை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய நந்தினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News