போக்குவரத்து பாதிப்பு
தாளவாடியில் பரவலாக மழை மரம் சாலையில் விழுந்து தமிழக - கர்நாடக இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு;
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் குளம் கொட்டைகளை வறண்டு மரம் செடிகள் காய்ந்து கிடந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, திகினாரை, தலமலை கெட்டவாடி, ஆசனூர் ,கேர்மாளம் திங்களூர் மற்றும் வனப்பகுதியில் சுமார் 30 நிமிடம் பரவலாக மழை பெய்தது. இந்த மிதமான மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியது. காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கோழிபாபாளையம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த தைலம் மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் தமிழகம் - கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது .வாகனங்கள் அனைத்தும் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. மரத்தை வெட்டி அப்புறப்படுத்த கர்நாடக நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 3 மணி நேரத்துக்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழகம் கர்நாடக இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமான தைலம் மரங்கள் உள்ளன. இது போன்ற மழை நேரங்கள் அல்லது காற்று வேகமாக வீசினால் இந்த மரங்கள் முடிந்து சாலையில் அடிக்கடி முழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.