சோளிங்கர் தோப்புளஅம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு விழா!

தோப்புளஅம்மன் கோவில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு;

Update: 2025-03-15 05:30 GMT
சோளிங்கரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கமலவிநாயகர் கோவில், தோப்புளஅம்மன் கோவில்க ளுக்கான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி ஆணையர் சங்கர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், நகர செயலாளர் கோபி, நகராட்சி துணைத்த லைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், அரக்கோணம் ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறங்காவலர் குழுஉறுப்பினர் பூர்ணிமாரவிச்சந்திரன் வரவேற்றார். கமலவிநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஏழு மலை, உறுப்பினர்களாக லீலாவதி, சடகோபாலன், தோப்புள அம்மன் கோவில் அறங்காவலர் குழுதலைவராக சோமநாதன் உறுப்பினர்களாக லதா, முருகேசன் ஆகியோருக்கு உதவி ஆணையர் சங்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.இதில் நகராட்சி கவுன்சிலர்கள் அருண்ஆதி, ராதாவெங்கடேசன், லோகேஸ்வரிசரத்பாபு, கணேஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News