அரக்கோணத்தில் குடும்ப தகராறில் கணவன் தற்கொலை!

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் கணவன் தற்கொலை!;

Update: 2025-03-15 05:35 GMT
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் சென்னையில் குடியேறினர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் தகராறு ஏற்பட்டதில் செந்தில்குமார் கோபித்துக் கொண்டு அரக்கோணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டார். விரக்தியில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News