டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலவு, கோள்களை கண்டு வியந்த பொதுமக்கள்!

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்முருகன் கோவில் வளாகத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன், செவ்வாய் கோள்களை பொதுமக்கள் கண்டு வியந்தனர்.;

Update: 2025-03-15 09:14 GMT
கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்முருகன் கோவில் வளாகத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன், செவ்வாய் கோள்களை பொதுமக்கள் கண்டு வியந்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பரப்பரை செய்து வருகிறது. இந்தாண்டு 5000 இடங்களில் அஸ்ட்ரானமி,ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம்,விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம் கோவிலுக்கு வருகை வந்த பக்தர்கள் வானில் தெரிந்த பௌர்ணமி நிலா மற்றும் வியாழன், செவ்வாய் கோள்களை பார்வையிட்டு வியந்தனர். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் வானவியல் குறித்தும் கோள்கள் குறித்து விளக்கி கூறினர். இதில் கோவில்பட்டி விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் குடும்பத்துடன் வருகை தந்து டெலஸ்கோப்பில் நிலாவினை பார்வையிட்டார், இதில் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் அனைவரும் டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன் ,செவ்வாய்,கோள்களை பார்வையிட்டு வியந்தனர்.

Similar News