பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தூத்துக்குடி பட்டினமருதூர் உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி பட்டினமருதூர் உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், சிவகங்கை, தூத்துக்குடி பட்டினமருதூர், தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் வரவேற்பும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.