ராமநாதபுரம் உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது
சாத்தான்குளம் உணவுப் பொருட்களை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வரும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்;
ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவிற்கு இணங்கவும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் G. விஜயகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி மண்டபம் வட்டாரத்திற்கு உட்பட்ட சாத்தான்குளத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் கு.லிங்கவேல் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரால் குறு , சிறு தானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் சிறுதானிய வகைகளில் இருந்தும் மற்றும் அதனைச் சார்ந்த உணவுப் பொருட்களை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வரும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும், உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்கும் முறைகள் பற்றியும், வைட்டமின், நார்ச்சத்து, புரத சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகள் மூலம் உடலுக்கு ஏற்படும் அதீத நன்மைகள் பற்றியும் விளக்கம் செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பான முறையில் உணவுகளை தயாரிக்கும் வழிகாட்டு நெறி முதல் கூடிய கையேடு வழங்கப்பட்டது .இந்த விழிப்புணர்வு முகாமில் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் K.விஜயகுமார் உட்பட சுமார் 21 உணவு வணிகர்கள் கலந்து கொண்டனர்.