வானகரம் அருகே நாய் நாய்க்கடி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
வானகரம் அருகே நாய் நாய்க்கடி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு;
வானகரம் அருகே நாய் நாய்க்கடி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு மதுரவாயல் அருகே வானகரம் பகுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டாலப் ஷேக் வயது 56 என்ற நபர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் அதில் கூழி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரை அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது அவர் அதற்காக அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று போட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாய் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று வடமாநில தொழிலாளி அவர் வேலை செய்யும் இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவர் உடலை மீட்டு மதுரவாயல் போலிசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் நாய் கடித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.