ஆரணி தேவாலயத்தில் இரத்ததான முகாம்

ஆரணி சிஎஸ்ஐ தேவாலயம் ஆண்கள் ஐக்கிய சங்கம், முப்பர்கள் ஐக்கிய சங்கம் மற்றும் ஆரணி அரசு மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை ஆரணி சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடத்தினர்;

Update: 2025-03-15 17:47 GMT
ஆரணி, ஆரணி சிஎஸ்ஐ தேவாலயம் ஆண்கள் ஐக்கிய சங்கம், முப்பர்கள் ஐக்கிய சங்கம் மற்றும் ஆரணி அரசு மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை ஆரணி சிஎஸ்ஐ தேவாலயத்தில் சனிக்கிழமை நடத்தினர். இதில் தேவாலய ஆயர் கே.மேஷாக் பிரேம்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நந்தினி கலந்து கொண்டு இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். ஆண்களுக்கு சங்க செயலாளர் ஏ எஸ் ஸ்டீபன் பொருளாளர் கே ஆனந்த், இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் என். செல்லமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேடம் இது கூட்டுனார் பி.பாஸ்கரபாண்டியன், ஜி.கிரகாசெல்வமணி, பி.ஜார்ஜ், அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் டார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News