கோவை: அரங்கநாதர் சுவாமி கோவில் மாசிமக தெப்ப தேர் திருவிழா !

காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சந்தான சேவை எனும் சாற்று முறை உற்சவ பூர்த்தி நடைபெற்றது.;

Update: 2025-03-16 13:41 GMT
  • whatsapp icon
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தலங்களில் ஒன்றான அரங்கநாதர் சுவாமி கோவிலில் மாசிமக தேர் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அரங்கநாத பெருமாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 12-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் (மார்ச் 14) இரவு 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கருமடை தோளம் பாளையம் சாலையில் உள்ள கருட தீர்த்த தெப்பக்குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். வாணவேடிக்கை முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றது. தெப்பக்குளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று சந்தான சேவை எனும் சாற்று முறை உற்சவ பூர்த்தி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News