சூலூர்: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி !
மாவட்ட அளவிலான கிட்டம்பாளையம் ஊராட்சிகான மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி.;
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சியும் கிட்டாம்பாளையம் கிரிக்கெட் கிளப்பும் இணைந்து நடத்திய கிட்டாம்பாளையம் ஊராட்சி கோப்பைக்கான மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டி கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ராகவேந்திரா அணி முதல் இடத்தையும், ஜெய்கிந்த் அணி இரண்டாம் இடத்தையும், வாரியார் அணி மூன்றாம் இடத்தையும், மற்றொரு அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே 20000 ரூபாய், 15000 ரூபாய், 10000 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் ரொக்கப்பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஊராட்சி முன்னாள் தலைவர் வி.எம்.சி. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பி. தங்கராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் செல்போன்களில் மூழ்காமல் விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன், பாஜக பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.