சோளிங்கர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
சோளிங்கர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!;
சோளிங்கர் ஒன்றியம் ஐய்பேடு காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (வயது 45). இவர் அதேப்பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் விவசாய நிலத்தில் அறுவடை செய்த வைகோலை எடுக்கும் பணிக்காக சென்றுள்ளார். அங்கு பணிகள் முடிந்து, குளிப்பதற்காக மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்கதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவின்பேரில் சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.