கோவை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழக அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-17 08:42 GMT
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து, கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அனைவரும் விஜய் வாழ்க, தவெக வாழ்க என முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News