அண்ணாமலை கைதை கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலை கைதை கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்;
டாஸ்மார்க் நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் செய்ய முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் அண்ணாமலையை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா சிலை முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையை விடுவிக்க கோரியும் திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் ஆர்ப்பாட்டம் காரணமாக திருச்செங்கோடு அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது