ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

மாண்டிச்சோரி பள்ளியின் நான்காம் ஆண்டு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா தனியார் மஹாலில் நடைபெற்றது;

Update: 2025-03-17 10:44 GMT
ராமநாதபுரம் கல்வியால் உலகை ஆள முடியும் கல்வி ஒரு மனிதனை உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும் என கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் கல்வி விழாவில் பேச்சு ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ஒன்பதாவது தெருவில் இயங்கி வரும் பார்க்லிங் டு பேஸ் மாண்டிச்சோரி பள்ளியின் நான்காம் ஆண்டு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா தனியார் மஹாலில் நடைபெற்றது இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்ட க்ரைம் பிரான்ச் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார் இதில் ராமநாதபுரம் பகுதியைச் சார்ந்த எஸ். ஸ்ரீ வட்ஷன் என்ற எல் கே ஜி மாணவர் ஸ்டார் கிங் டாப்பர் மற்றும் ஜாக்கி புக் ஆஃப் உலக ரெக்கார்ட், மற்றும் உலகம் வெயிட் புக் ஆப் ரெகார்ட் ஆகிய இரண்டு சாதனைகளை புரிந்த மாணவருக்கு விருதுகளை வழங்கி பாராட்டி வாழ்த்தினார் இதே போல இருவருக்கும் மேற்பட்ட சாதனை மாணவர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார் அப்போது கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் பேசுகையில் தனி மனிதனுக்கு கல்வி மிக மிக அவசியம் அதுவும் அடிப்படை கல்வி என்பது தேவையான ஒன்று கல்வி பயின்றால் உலகை ஆளலாம் கல்வியால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை ஆகவே அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பெற்றோர்கள் அடிப்படை கல்வியை முறையாக கொடுக்க முன்வர வேண்டும் இவர்கள்தான் இந் நாட்டின் வருங்கால எஜமானர்கள் எனவும் பேசினார் தமிழ்நாடு பிளே ஸ்கூல் அசோசியேசன் மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன் கும்பகோணம் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சிவரஞ்சனி பொள்ளாச்சி பள்ளியின் நிர்வாக இயக்குனர் திவ்யா தர்ஷிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News